நியூபோர்ட்: அமெரிக்காவின் ரோடி தீவில் உள்ள நியூபோர்ட் நகரில் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் பேம் அரங்கு உள்ளது. இதில் இடம்பெற, சுவிட்சர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதையடுத்து, பெடரர் தொடர்பான சாதனைகள், நினைவுச் சின்னங்கள் இங்குள்ள கண்காட்சியில் இடம்பெறும். பெடரர், ஆடவர் டென்னிஸ் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை முதலில் வென்றவர்.
+
Advertisement


