சென்னை: தென்காசியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 6 நபர்கள் பலியான செய்தி மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழந்திருப்பது அந்த குடும்பங்களின் வாழ்வையே பெருந்துயரத்தில் தள்ளும் மிகக் கொடிய சம்பவமாகும். விலை மதிப்பில்லாத உயிர்கள் விபத்தில் பறிபோவது மனதை பதற செய்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக நலம்பெற விரும்புகிறேன். இந்த துயரச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். மக்களின் உயிர் பாதுகாப்பு உறுதியாகும் விதத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது மிக அவசியமாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



