கோவை: இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையம் வர உள்ளார். பின்னர் காரில் புறப்பட்டு கோவை அடுத்துள்ள பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்புராயன் கோயிலில் நடைபெறும் 10,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கிறார். விழாவை முடித்துக்கொண்டு மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடையும் துணை ஜனாதிபதி இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் ராஜ்பூர் சென்றடைகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் ஒன்னிபாளையம் கருப்பராயன் கோயில் பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணி வரை டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement 
 
 
 
   