மதுரை: அறநிலையத்துறை விதிகள்படி கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்பட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும். கோயில் சொத்துகள் கோயில் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். புதுக்கோட்டையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement