Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கடந்த 4 ஆண்டுகளில் கோயில்களின் சார்பில் சீர்வரிசைப் பொருட்களுடன் 2,800 இணைகளுக்கு திருமணம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் கோயில்கள் சார்பில் 2,800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை கொளத்தூர் சோமநாத சாமி கோயில் சார்பில் 4 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் கோயில்கள் சார்பில் 2,800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மேலும் 1,000 திருமணங்களை நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திருமணங்கள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு அவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கோயில் திருமண மண்டபங்கள் சேவை கட்டணத்தை தவிர வேறு எந்த வாடகையும் இல்லாமல், வழங்கப்பட்டு வருகிறது. கோயில்களின் அர்ச்சகர்கள் அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தெய்வ சன்னிதானத்தில் அவர்களது மனம் குளிர்கின்ற வகையிலே நலத்தை நாடி பிரார்த்தனை செய்வது, அந்த தெய்வத்திற்குண்டான அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அரசியல் சாயத்தை பூசிக் கொள்ளக்கூடாது. இதுகுறித்து புகார் வந்திருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் இது குறித்து பரிசீலித்து, தேவைப்பட்டால் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் முல்லை, மோகனசுந்தரம், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி உறுப்பினர் நாகராஜன், உதவி ஆணையர்கள் சிவக்குமார், பாரதிராஜா, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், சந்துரு, மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.