கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள கோபிநாத பெருமாள் கோயிலில் கடந்த 8 மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக கோயில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கி, நேற்று இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில், தமிழ்மணி (60), அவரது மனைவி தாமரைச்செல்வி(57) மற்றும் ஆனந்தகுகன் என்ற 2வயது குழந்தை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர்.
+
Advertisement

