சென்னை: தென்மேற்கு பருவக்காற்று திசை மாறி மகாராஷ்டிரா வழியாக வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதாலும், தெற்கு காற்றும் மேற்கு காற்றும் திசை மாறி வீசுவதால் தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வரை செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் 102 டிகிரி வெயில் நிலவும். மதுரையில் அனல் காற்று வீசும். மதுரை, திருச்சியில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை குறைய தொடங்கும். ஆனால் மதுரையில் அதேவெப்பநிலை நீடிக்கும். இந்நிலையில், ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பிறகு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அதுவரை 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும் வாய்ப்புள்ளது. வெப்ப நிலை அதிகரிக்கும் காரணமாக இடிமின்னல் தோன்றி வெப்பச் சலன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
Advertisement