தெலங்கானாவில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் 11 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு
திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சைதாபாத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11 சிறுவர்களை அங்கு பணிபுரியும் போலீஸ்காரர் ரஹ்மான் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 3 பேர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், 11 குழந்தைகளை ரஹ்மான் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். இதையடுத்து ரஹ்மான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.