திருமலை: தெலங்கானாவில் விநாயகர் பூஜையில் வைத்த லட்டு ரூ.2.32 கோடிக்கு ஏலம் போனது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் விநாயகர் சதுர்த்தி அன்று சுவாமியின் கைகளில் வைக்கப்பட்ட லட்டுவைப் பெறுவதில் பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். விநாயகர் லட்டு ஏலம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பண்ட்லகுடா ஜாகீரில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் கடந்த ஆண்டு இங்குள்ள விநாயகர் லட்டு ரூ1.87 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு, அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனைபடைத்தது. பண்ட்லகுடா ஜாகீரில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் ஏற்பாடு செய்த விநாயகர் லட்டு ஏலத்தில் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக ரூ2 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரத்திற்கு 10 கிலோ லட்டுவை பால கணேஷ் அணி வென்றது.