தெலங்கானா: ரங்கார ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் மூவர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பிய இளைய சகோதரிகள் என தெரியவந்துள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் 3 பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்தனர். பலியான மூன்று சகோதரிகளின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
+
Advertisement 
 
 
 
   