நெல்லை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கடந்த மக்களவைத் தேர்தலில் தேஜ கூட்டணியில் இணைந்தே போட்டியிட்டார்.
தற்போது வரையிலும் அவர் எங்கள் கூட்டணியில்தான் பயணிக்கிறார். எனவே, அவர் எங்கள் கூட்டணியில் நீடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை. தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி. நியமனம் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.