சென்னை: கொளத்தூர் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (26). இவர் அல்பிராசோலம் என்ற போதைப்பொருளை வைத்திருப்பதாக ராஜமங்கலம் போலீசாருக்கு கடந்த 2022 ஜூலை 16ம் ேததி தகவல் வந்தது. இதையடுத்து, ரெட்டேரி சந்திப்பு அருகே நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வானத்தில் வந்த ஏழுமலையிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் 250 கிராம் அல்பிராசோலம் என்ற போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், ஏழுமலை மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.
அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபாதமும் விதித்து தீர்ப்பளித்தார்.