சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) வெற்றிபெறுவது கட்டாயம். இந்தநிலையில், தகுதி தேர்வு தாள்-1, தாள் -2 ஆகியவை நடப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, நவம்பர் 1ம் தேதி, 2ம் தேதிகளில் இந்த தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.