Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது திராவிடமாடல் அரசின் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது திராவிடமாடல் அரசின் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில், மக்களின் முதன்மைத் தொண்டனாகப் பெருமையோடு பங்கேற்று, அனைத்துக் கிராமங்களின் முதன்மையான 3 தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், நம்மஊர் நம்மஅரசு திட்டத்தை அறிவித்தேன்! தன்னிறைவடைந்த, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது திராவிடமாடல் அரசின் இலக்கு இவரு தெரிவித்துள்ளார்.