Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அவுன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான அவுன்ஷுமான் கெய்க்வாட்(71) புற்றுநோய் காரணமாக காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கெய்க்வாட், வதோதராவில் உள்ள பைலால் அமீன் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். சமீபத்தில், அவுன்ஷுமான் கெய்க்வாட் சிகிச்சைக்காக பிசிசிஐ ரூ.1 கோடியை வழங்கியது.

கெய்க்வாட் 1975இல் இந்தியாவுக்காக அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 41.56 சராசரியில் 12,000 ரன்களை குவித்துள்ளார். இதில் 34 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும் அடங்கும்.

அவரது ஓய்வுக்குப் பிறகு, 1997 இல் இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது 1998ல் ஷார்ஜாவில் நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் 1999ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது போன்ற சிறப்பான வெற்றிகளை அவர் கண்டுள்ளார். அவுன்ஷுமான் கெய்க்வாட் 2018ஆம் ஆண்டில் பிசிசிஐயால் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கெய்க்வாட்டின் மறைவுக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

"அவுன்ஷுமன் கெய்க்வாட்டின் மறைவு இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு. அவரது அர்ப்பணிப்பு, பின்னடைவு மற்றும் விளையாட்டின் மீதான அன்பு ஆகியவை இணையற்றவை. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, பலருக்கு வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார். அவருடைய பங்களிப்புகள் எப்போதும் நினைவில் இருக்கும். இந்த இழப்பைச் சமாளிக்கும் போது எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன" என பின்னி தெரிவித்துள்ளார்.

“அவுன்ஷுமன் கெய்க்வாட்டின் மறைவு கிரிக்கெட் சமூகத்திற்கு பெரும் இழப்பாகும். இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சேவகன், அவரது தைரியம், விவேகம் மற்றும் விளையாட்டிற்கான அர்ப்பணிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். விளையாட்டில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன" என்று ஜெய் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.