கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் மேற்குவங்க கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி தெற்கு கொல்கத்தாவின் முகுந்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 200 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் ஜாமீன் கோரி அவர் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் அவரை நேற்று நீதிமன்றம் நேற்று ஜாமீனில் விடுதலை செய்தது.
