சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தாள் 1 மற்றும் தாள்2க்கான தேர்வுகள் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள நபர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பித்த நபர்கள் அவர்களின் கடவுச் சொல்(Password) மற்றும் பயன்பாட்டு குறியீட்டை(User ID) பயன்படுத்தி தங்களின் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் TNTET -2025 என்ற சிறப்பு முகாம் நவம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை (வேலை நாட்களில்) செயல்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
+
Advertisement 
 
 
 
   