திருமலை: பள்ளி மாணவியிடம் 3 ஆண்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சமூக அறிவியியல் ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஜலபதிரெட்டி. இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று எச்சரித்ததாகவும் தெரிகிறது.
ஒருகட்டத்தில் ஆசிரியரின் அத்துமீறல் அதிகமாகவே, மாணவி, பெற்றோரிடம் இதுகுறித்து கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்ட பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ஜலபதிரெட்டியை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
