டாடா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி கார்களில் ஒன்றான டாடா சியரா, 1991ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2003ம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்தக் கார் இந்தியச் சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு பாரத் மொபிலிடி குளோபல் எக்ஸ்போவில் இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அடுத்த தலைமுறைக்கான இந்த புதிய கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் ஆகிய தேர்வுகளில் கிடைக்கும் என கூறப்படகிறது.
இதுபோல், ஹாரியர் இவியில் உள்ளது போன்றே திறன் கொண்ட எலெக்ட்ரிக் வேரியண்டும் அறிமுகம் செய்யப்படும் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இந்தக்கார் இந்த மாதம் 25ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

