டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பஞ்ச், 6 லட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்குள் இந்த சாதனையை இது பெற்றுள்ளது. இந்த தகவலை டாடா பாசஞ்சர் மொபிலிடி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி விவேக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். நிறுவனத்தின் துணை தலைவர் மோகன் சாவர்க்கர், துணை தலைவர்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பஞ்ச், 6 லட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்குள் இந்த சாதனையை இது பெற்றுள்ளது. இந்த தகவலை டாடா பாசஞ்சர் மொபிலிடி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி விவேக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். நிறுவனத்தின் துணை தலைவர் மோகன் சாவர்க்கர், துணை தலைவர் (இயக்கம்) பிரமோத் சவுத்ரி ஆகியோர் சாதனை அறிவிப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
2021 அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டஇது, 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பெண்கள் மற்றும் முதல் முறை கார் வாங்குவோர் பெரும்பாலானோரின் தேர்வாக டாடா பஞ்ச் உள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.