டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரி குறைப்புக்குப் பிந்தைய விலை விவரத்தை வேரியண்ட் வாரியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் ரூ.65,000 முதல் ரூ.1.55 லட்சம் வரை விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டியாகோ ரூ.75,000 வரை, டிேகார் ரூ.80,000 வரை, அல்ட்ராஸ் ரூ.1.1 லட்சம் வரை பஞ்ச் ரூ.85,000 வரை குறையும். இதுஏபால் ஹாரியர் ரூ.1.4 லட்சம் வரை, சபாரி ரூ.1.45 லட்சம் வரை குறையும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
டொயோட்டா கார்கள் ரூ.16 லட்சம் வரை குறைகிறது. உதாரணமாக இன்னோவா கிரிஸ்டா ரூ.19.66 லட்சத்தில் இருந்து ரூ.18.66 லட்சமாகவும், டாப் வேரியண்ட் ரூ.1.81 லட்சம் குறைந்து ரூ.25.27 லட்சமாகவும், இன்னோவா ஹைகிராஸ் துவக்க வேரியண்ட் ரூ.1.03 லட்சம் குறைந்து ரூ.18.06 லட்சம். டாப் வேரியண்ட் ரூ.68,000 குறைந்து ரூ.31.9 லட்சம், பார்ச்சூனர் துவுக்க வேரியண்ட் ரூ.2.4 லட்சம் குறைந்து ரூ.33.65 லட்சம், டாப் வேரியண்ட் ரூ.3.49 லட்சம் குறைந்து ரூ.48.85 லட்சம், எல்சி 300 ரூ.16.07 லட்சம் குறைந்து ரூ.2.24 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகிந்திரா நிறுவனம் ரூ.1,56,100 வரை விலையை குறைத்துள்ளது. ஹூண்டாய் கார்கள் விலை ரூ.2,40,303 வரை குறைந்துள்ளது. இதுபோல், எம்ஜி மோட்டார்ஸ் ரூ. 3,04,000 வரையிலும், ஸ்கோடா ரூ. 3,28,267 வரையிலும், கியா ரூ.4,48,542 வரையிலும் விலையை குறைத்துள்ளன.