டாடா நிறுவனம் ஹாரியர், சபாரி கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு உற்பத்தி ஆண்டு ஹாரியர், சபாரி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகை உண்டு. இதில் ரொக்க தள்ளுபடி ரூ.75,000 வரை பெறலாம். ஷோரூம் விலை ஹாரியர் சுமார் ரூ.14 லட்சம் முதல் ரூ.25.24 லட்சம் வரை, சபாரி, ரூ.14.66 லட்சம் முதல் ரூ.25.96 லட்சம் வரை. இதுபோல் டாடா அல்ட்ராசுக்கு ரூ.85,000 வரையிலும் (ஷோரூம் விலை ரூ.6.3 லட்சம் முதல்), டாடா பஞ்ச் காருக்கு ரூ.75,000 வரையிலும் (ஷோரூம் விலை ரூ.5.5 லட்சம் முதல்), டியாகோ, டிகோர் கார்களுக்கு ரூ.55,000 வரையிலும் (டியாகோ ரூ.4.57 லட்சம் முதல், டிகோர் ரூ.5.49 லட்சம் முதல்), நெக்சான் (ரூ.7.99 லட்சம் முதல்) மற்றும் கர்வுக்கு (ரூ.9.65 லட்சம் முதல்) ரூ.50,000 வரையிலும் தள்ளுபடி சலுகை பெறலாம். இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்பட மாறுபடலாம்.
+
Advertisement


