டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30க்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு அளித்துள்ளது. 1,479 கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமலில் உள்ளது. காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி சுற்றுச்சூழல்-வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது