தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே மாரப்ப கவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கார்த்திகேயன் (35), இவரது தனது தோட்டத்தில் 10 செம்மறி ஆடுகள், 12 நாட்டு கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வந்தார்.
நேற்று தோட்டத்தில் மேய்ந்த ஆடுகளை அவ்வழியாக கூட்டமாக வந்த தெரு நாய்கள் விரட்டி கடித்ததில் சம்பவ இடத்தில் 6 ஆடுகள், 2 சேவல் மற்றும் 6 நாட்டு கோழிகள் பலியாகின. இவற்றின் மதிப்பு ரூ. 65 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. நேற்று மாலை மீண்டும் ஆடுகளை பட்டியில் அடைக்க வந்த கார்த்திகேயன் ஆடுகள், நாட்டு கோழிகள், சேவல்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கார்த்திகேயன், குண்டடம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசில் புகார் அளித்தார். அதில், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், இறந்த ஆடு, சேவல், கோழிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.