கோலாலம்பூர்: சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (International Commission on Irrigation & Drainage) சார்பில் 4-வது உலக நீர்பாசன மாநாட்டில் (4th World Irrigation Forum) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 10.09.2025 இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரியமிக்க நீர்ப்பாசன கட்டமைப்புகளான 1852 இல் கட்டப்பட்டு 200 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள செய்யார் அணைக்கட்டு, 300 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள கொடிவேரி அணைக்கட்டும் மற்றும்
சோழர் காலத்தில் கட்டப்பட்டு 700 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள நொய்யல் நீர் பாசன கட்டமைப்புக்கும் அளித்த விருதினை சி.பொதுப்பணி திலகம். தலைமை பொறியாளர், சென்னை மண்டலம் மற்றும் தீ.தமிழ்ச்செல்வி, தலைமை பொறியாளர், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம், சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் தலைவர் (International Commission on Irrigation & Drainage) டாக்டர். மார்கோ ஆர்சியேரி மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர். ஆர்.கே.குப்தா அவர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.