Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு திட்ட மற்றும் வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர்

சென்னை: ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு திட்ட மற்றும் வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ஈரோட்டில் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஈரோட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரம் கொண்ட மாநிமாக மாற்ற வேண்டும் என் இலக்கை அடிப்படையாக கொண்டு முக ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம், வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடுகள், கட்டமைப்புகள் மேம்பாடு என அனைத்து பிரிவுகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு நிதியமைச்சர் பிடிஆர் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் 2வது முழு பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்க முக்கிய பங்காற்றும் ஐடி துறையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஐடி சேவை துறை தகவல் தொழில்நுட்பப் துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், நியோ-டைடல் பூங்காக்கள் (Neo-Tidel Parks) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடியில் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த நியோ டைடல் பார்க் மூலம் சிறிய நகரங்களுக்கு படையெடுக்கும் பெரிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,”தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)” தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஈரோடு பகுதியில் மினி டைடல் பார்க் அமைப்பதற்காக திட்ட மற்றும் வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது