காஷ்மீர்: காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக பக்தர் உயிரிழந்தார். அரக்கோணத்தை சேர்ந்த குப்பன் சீனிவாசன்(70) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மழை காரணமாக கத்ராவில் இருந்து செல்லும் பாதையில் பங்கங்கா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
Advertisement