சென்னை: தமிழர்களின் உணர்வை உரிமையை நிலைநாட்டிய ஜூலை 18 தமிழ்நாடு நாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்போருக்கு, தமிழ்நாடு என்ற பெயரை பல போராட்டங்களை முன்னெடுத்து போராடி பெற்று தந்தது திராவிட இயக்கம் என்ற பதில் ஒன்றே போதுமானது.
தந்தை பெரியாரின் முழக்கமாக துவங்கி, விருதுநகர் மாவட்டம், மண்மலைமேடு பகுதியில் பிறந்த சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தது வரை தொடர்ந்து நடந்த போராட்டக் களங்களையும், தியாகம்களையும் வடநாட்டு ஆரிய ஆதிக்கத்திற்கு அடிவருடும் அடிமைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சங்கரலிங்கனாரின் கோரிக்கையான தமிழ்நாடு பெயர் சூட்டலை சட்டமன்றத்தில் அறிவித்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா 'தமிழ்நாடு வாழ்க' என்று முழங்க, அனைத்து உறுப்பினர்களும் 'தமிழ்நாடு வாழ்க' என்று முழங்கிய சிறப்புக்குறிய நாள், இன்றய நாள். நாமும் முழங்குவோம் அண்ணா வழியில். தமிழ்நாட்டின் உரிமை காக்க மாண்புமிகு முதல்வர் தலைமையில் ‘ஓரணியில் தமிழ் நாடு’ என்று. வாழ்க "தமிழ்நாடு நாள்". என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.