சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை தமிழக காங்கிரஸ் எதிர் கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக கட்சியை பலப்படுத்த டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக காங்கிரசில் அணி வாரியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தமிழக இளைஞர் காங்கிரசுக்கு மேலிட பொறுப்பாளர்களை கட்சி தலைமை நியமித்துள்ளது.
ஏற்கனவே, தமிழக காங்கிரசுக்கு மேலிட பொறுப்பாளராக சகாரியா மற்றும் துணை பொறுப்பாளர்களாக ஜின்சத், ஷிபினா நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கூடுதலாக முகமத் ஷாகித் மேலிட பொறுப்பாளராகவும், துணை பொறுப்பாளர்களாக கிரிஷம் ராஜ், பிந்தியா பானர்ஜி, விஷ்வஜித் கவுசி, தாரிக் பகவான், சீனிவாச கோகடா என 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸ் மூலம் தமிழ்நாட்டில் தேர்தல் களப்பணியாற்றுவார்கள் என்று அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் அறிவித்துள்ளார்.


