சென்னை: தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது: தமிழ்நாட்டில இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? ஓட்டு போட முடியாத நிலை வந்தாலும் வரலாம். இதற்கு காரணம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் தான். எல்லாருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பி வாங்கணும்.
அதை தேர்தல் ஆணையம் சரிபார்த்து, வாக்காளர் பட்டியலை வெளியிடுவாங்க. அந்த வாக்காளர் பட்டியல்ல நம்ம பேர் இருக்கணும். அப்பதான் நம்மளால ஓட்டு போட முடியும். அந்த புது பட்டியல்ல நம்ம பேர் இல்லைன்னா அதற்கு ஒரு தனி பார்ம், புராசஸ் இருக்கு. இதனால பாதிக்கப்படுவது உழைக்கும் மக்கள், ஏழைகள், பணிக்கும் செல்லும் பெண்கள்தான்.
புதுசா ஓட்டு போட இருக்குறவங்களுக்கு பார்ம் 6ன்னு ஒன்னு இருக்கு. அதை நேர்லயோ ஆன்லைன்லயோ விண்ணப்பிச்சு கொடுங்க. அந்த படிவம் கிடைக்கலன்னா இருக்கவே இருக்கு ஆன்லைன். உங்க பேரை அதுல இல்லாம செய்யறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ என்னென்ன தில்லுமுல்லு வேலைகள் செய்யணுமோ எல்லாமே அவங்க செய்வாங்க என பேசியிருக்கிறார்.


