சென்னை: தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ; பீகாரில் எந்த விசாரணையும் இல்லாமல் 65 லட்சம் பேரை நீக்கி குளறுபடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று தொடங்கிய SIR பணிகள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதை கள ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கொடுக்கப்பட்ட 30 நாட்களில் ஒருநாள் படிவங்கள் இல்லாமலேயே முடிந்துவிட்டது
படிவம் கொடுத்த மறுநாளே வாக்காளர்கள் பூர்த்தி செய்து திருப்பித் தரவேண்டும் என கூறுவது நியாயமல்ல. எஸ்.ஐ.ஆருக்காக தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்ட காலம் சரியானதல்ல. தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்வது சரியல்ல. வடகிழக்கு பருவமழை, கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் விழாக்களை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அதிமுக எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கதான் செய்வார்கள். பீகாரில் எந்த விசாரணையும் இல்லாமல் 65 லட்சம் பேரை நீக்கி குளறுபடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகே ஆவணங்கள் கேட்கப்பட உள்ளது. ஒரு மாதத்துக்குள் கணக்கீடு படிவத்தை நிரப்பி தராதவர்கள் வாக்காளர்களாக இருக்க முடியாது. ஒரு மாதத்துக்கு பிறகு வாக்காளராக சேர புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்களின் கேள்விகளுக்கு எந்த விளக்கமும் தேர்தல் ஆணையம் அறிவிப்பில் இல்லை.
எஸ்.ஐ.ஆர் பணிகள் பீகாரை விட மோசமாக இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறோம். பீகாரில் படிவங்களுடன் ஆவணங்களை வழங்கவேண்டும்; தமிழ்நாட்டில் அப்படி வாய்ப்பு இல்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறி விப்பை 20 முறை படித்தால்தான் வழக்கறிஞர்களுக்கே புரியும். பீகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணிகளை விட தமிழ்நாட்டில் மோசமாக உள்ளது. தேர்தல் ஆணைய அறிக்கை தெளிவற்ற குழப்ப அறிக்கையாக உள்ளது. வாக்குச் சாவடி முகவர்களுக்காக பயிற்சி வெறும் கண்துடைப்பு தான் என்று கூறினார்.
