Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு : சுற்றுலாத்துறை 2021-22ம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

இந்த விருதுகள் சுற்றுலாத்தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளைச் செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விருதுகள் சென்னையில் வழங்கப்படும் அதற்கான இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.9.2025 ஆகும். எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.