Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலம் திமுக ஆட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலம் திமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் துணை முதலமைச்சருக்கு பாராட்டுகள். நமது மாணவ, மாணவிகள் வெற்றிகளை குவிக்க உதவும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகள்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 4 ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலிக்கிறது. திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் நடப்பாண்டில் 16.28 லட்சம் பேர் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

அங்கீகாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அரசு வழங்கி வருகிறது. முதல்வர் கோப்பை போட்டியில் வெல்வோருக்கு கல்வி உதவிக் தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றையும் வழங்குகிறோம். அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை உள்கட்டமைப்புகளுக்காக ரூ.129 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். விளையாட்டுத்துறை உள்கட்டமைப்புக்காக 4 ஆண்டுகளில் ரூ.601 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,945 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சிகாலத்தில் விளையாட்டுத்துறைக்கு அதிகளவில் நிதி. விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் 4 பேருக்கு ரூ.5 கோடி தொகை வழங்கப்பட்டது. 75 சட்டமன்ற தொகுதிகளில் தலா ரூ.3 கோடியில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வேறு எந்த மாநிலமும் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்திருக்காது என்பதை நெஞ்சை நிமிர்த்தி கூறுவேன்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டம்; விளையாட்டுத் துறையில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு நிகழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலம் திமுக ஆட்சி என்று கூறினார்.