Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் பதிவு செய்யாத அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நோயறிதல் மையங்கள் (Clinics) ஆகியவை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 1997ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். ஆயுதப்படை நடத்தும் நிறுவனங்களுக்கு தவிர அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் இரண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். WWW.tncea.dmrhs.tn.gov.in என்ற இனையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்துதல்) சட்டம் 1997ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பொதுமக்கள் போலி மருத்துவர்கள் தொடர்பாக புகார் அளிக்க tncea.dmrhs@gmail.com என்ற இனையதளத்திலும், 104 என்ற இலவச தொடர்பு எண் மூலமும் புகார் அளிக்கலாம். ஒரு முறை பதிவு பெற்ற மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள் அதன் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

5 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் WWW.tncea.dmrhs.tn.gov.in என்ற இனையதளம் மூலம் பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ளலாம். பதிவு செய்யாத மருத்துவமனைகள், நிறுவனங்கள் வரும் ஜூன் 2026க்குள் மாவட்ட தகுதி திறன்வாய்ந்த அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கவோ, சலுகைகள் வழங்கப்படமாட்டாது என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.