சென்னை: தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அக்.24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement