சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழக பார்கவுன்சிலுக்கு 2018ல் தேர்தல் நடந்தது. தற்போது உள்ள பார்கவுன்சில் நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்து விட்டது. இருப்பினும், 2 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தேர்தலை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வரதன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2026 ஏப்ரல் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எந்த கால நீடிப்பும் செய்யக் கூடாது என்று இறுதி கெடு விதித்துள்ளது. மேலும் பார்கவுன்சில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது என்றார்.
+
Advertisement


