கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இதுவரையில் எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி தேர்தல் பிரசாரம் நடத்தி இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழக அரசியல் வரலாற்றில் இந்த துயர சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது.
இச்சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று சொல்வதோ, அல்லது காவல்துறை தான் காரணம் என்று சொல்வதோ பிரச்னைகளை திசை திருப்புவதாகத்தான் அமையுமே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. இது போன்ற நடவடிக்கைகள் பிற்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.