Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எந்த முகமூடி அணிந்து வந்தாலும்; எத்தனை அடிமைகளை சேர்த்து வந்தாலும்: தமிழ்நாடு உங்களுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: எந்த முகமூடி அணிந்து வந்தாலும்; எத்தனை அடிமைகளை சேர்த்து வந்தாலும் தமிழ்நாடு உங்களுக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரபிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணை குழுவை அனுப்பாத பாஜ, கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பாஜ, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜ, கரூர் நெரிசலை பயன்படுத்தி யாரை தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளை சேர்த்து வந்தாலும், புதிதாக யாரை சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ தான். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.