தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த மழையின் அளவு, எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மழை அதிகளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில், மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றின் கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.