சென்னை: மாணவர்களின் முகத்தை பார்க்கும்போது உற்சாகம் அடைகிறேன் என சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது எனது கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது. எனது உடலில் உயிர் இருக்கும் வரையில் கலைஞர் கற்றுத் தந்திருக்கக் கூடிய உழைப்பு இருக்கும் வரை எனது கடமையை நிறைவேற்றுவேன். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பெற்றுள்ள பயிற்சி சிறிய துவக்கம்தான். இதே பாதையில் வெற்றி பெற தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் வளர்ச்சிக்கேற்றார்போல் அப்கிரேட் ஆக வேண்டும். காலையில் இருந்து கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஏராளமானவை உள்ளன, எது வேண்டுமோ அதை தேர்வு செய்து கற்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது.
+
Advertisement