சென்னை: திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ேநற்று கனமழை பெய்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
16ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 17ம் தேதியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். இதேநிலை 19ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
