Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசுத் துறைகளில் 330 இடங்கள்

பணியின் பெயர்கள் விவரம்:

அசிஸ்டென்ட் டைரக்டர் (நகரமைப்பு மற்றும் திட்டம்), அசிஸ்டென்ட் மேனேஜர் (மைன்ஸ்), அசிஸ்டென்ட் மேனேஜர் (பி அண்ட் ஏ), அசிஸ்டென்ட் பிளானர், இங்கிலிஷ் ரிப்போர்ட்டர், மேனேஜர் மைன்ஸ், தமிழ் ரிப்போர்ட்டர், சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபீசர், ரிசர்ச் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் டைரக்டர் (பயிற்சி/ முதல்வர், ஐடிஐ), வெட்டினரி அசிஸ்டென்ட் சர்ஜன், துணை இயக்குநர் (சட்டம்), அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் (புராஜெக்ட்ஸ்) அடிப்படை கட்டமைப்புகள், அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் (புராஜெக்ட்ஸ்) புராஜெக்ட் மேனேஜ்மென்ட், டெபுடி மேனேஜர் (என்விரோன்மென்ட்), அசிஸ்டென்ட் டைரக்டர் (ஸ்டேடிஸ்டிக்கல் அனலிசிஸ்ட்), அசிஸ்டென்ட் செக்ரட்டரி, தலைமை ஸ்தபதி, ரீஜினல் ஸ்தபதி, புள்ளியியல் உதவி இயக்குநர், அசிஸ்டென்ட் மேனேஜர் (புராஜெக்ட்ஸ்), சைக்காலஜிஸ்ட், சோஷியாலஜிஸ்ட், பேக்டரி மேனேஜர் (எஸ்கேடி), பேக்டரி மேனேஜர் (ஆர்கேடி), அசிஸ்டென்ட் டைரக்டர் (டெக்னிக்கல்), சீனியர் என்டோமலஜிஸ்ட், அசிஸ்டென்ட் சூபரின்டெண்ட் (கெமிக்கல் விங்க்), அசிஸ்டென்ட் டைரக்டர்- இன்டஸ்ட்ரில் மற்றும் காமர்ஸ் (சர்வே மற்றும் ஸ்டேடிடிக்ஸ்), சயின்ஸ் சி கிரேடு, அசிஸ்டென்ட் மேனேஜர், அசிஸ்டென்ட் மேனேஜர்.

சம்பளம்: தமிழக அரசின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது: 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைத் தவிர இதர பிரிவினருக்கு- அதாவது எஸ்சி, அருந்ததியர், எஸ்டி, பிற்பட்டோர,் மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முக்கிய பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.200 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. ஒருமுறை பதிவேற்றம் முறையில் தங்களைப் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.06.2025.