சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணைக் கட்ட உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி அளித்து விட்டதாக கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ள கருத்து ஏற்கத்தக்கதல்ல. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதற்கு முனைந்திருக்கிறது.
இந்திய அரசின் நீர் வள ஆணையம் எந்த சூழ்நிலையிலும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
