Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள் : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு

தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு . மொத்த காலியிடங்கள்: 645.

i) குரூப்- 2 பணியிடங்கள் விவரம்: அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர்-6, ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட்-8, புேராபேஷன் ஆபீசர்-5, சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-6, ஸ்பெஷல் அசிஸ்டென்ட்-2, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபீசர்-2, அசிஸ்டென்ட் செக்‌சன் ஆபீசர்-1, பாரஸ்டர்-22ii) குரூப்-2ஏ பணியிடங்கள்சீனியர் இன்ஸ்பெக்டர்- 65, அசிஸ்டென்ட் கிரேடு-III- 4, அசிஸ்டென்ட்- (ரெவினியூ)- 13, அக்கவுன்ட் அசிஸ்டென்ட்- 2, லோயர் டிவிசன் கிளார்க்-2, எக்சிக்யூட்டிவ் ஆபீசர்-11, ஜூனியர் சூப்பிரண்டு/சூபர்வைசர்-1, சீனியர் இன்ஸ்பெக்டர் (ரெவினியூ)- 40, அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர்-1, ஆடிட் இன்ஸ்பெக்டர்-11, அசிஸ்டென்ட் (பல்வேறு துறைகள்)- 442.

தகுதி:

1. அசிஸ்டென்ட் செக்சன் ஆபீசர்: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் ஜெனரல் லா பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதொவதொரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பாரஸ்டர்: வேளாண்மை/அனிமல் ஹஸ்பண்டரி/ தாவரவியல்/வேதியியல்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/பாரஸ்டரி/தோட்டக்கலை/மரைன் பயாலஜி/விலங்கியல்/ கால்நடை அறிவியல்/வனவிலங்கு உயிரியல் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-2: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எல். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட்: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்து படித்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகள் தவிர இதர அனைத்து பணிகளுக்கும் ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (பொதுப் பிரிவு): புரொபேஷன் ஆபீசர்- 26 முதல் 42க்குள் இருக்க வேண்டும். சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-2: 20 முதல் 32க்குள் இருக்க வேண்டும். பாரஸ்டர்: 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/சீர் மரபினர்/முஸ்லிம்/மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகளுக்கு தமிழக அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் தவிர இதர பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி/எஸ்டி/பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. வயது வரம்பானது 01.07.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு, முதல்நிலை தேர்வு (பிரிலினமரி தேர்வு), மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். வருகிற செப்.28ம் தேதி பிரிலிமினரி தேர்வு நடைபெறும். இதில் பொது அறிவு, கணித அறிவு மற்றும் தமிழ் அல்லது ஆங்கில மொழி தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு கேள்விகள் பட்டப்படிப்பு தரத்திலும், மொழித் திறன் தொடர்பான கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் கேட்கப்படும்.

இதில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம், தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வு கட்டணம்: ரூ.100/- மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.ஒன் டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் தங்களைப் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2025.