தமிழ்நாட்டில் பருவமழை காலங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ள, நோய் பாதிப்பு இல்லாத நிலை உள்ளது: அமைச்சர் தகவல்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி டி.ஆர்.பாலு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: பருவ மழை காலங்களில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளோ, நோய் பாதிப்புகளோ இல்லாத நிலை என்பது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மருத்துவ முகாம்கள் 10,000 என்கின்ற வகையில் நடத்தப்பட்டு, ஏதாவது கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் அங்கு உடனடியாக மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தி ஒரு ஆண்டிற்குள்ளாகவே 27,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இப்போது தான் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. நேற்று வரை 17 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
