சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகில் உள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வலை, ஜிபிஎஸ் கருவி, இன்ஜின், மொபைல் போன்கள், மீன்கள் உள்ளிட்ட சுமார் 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டிப்போடு தெரிவித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
+
Advertisement