தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்து மாணவர்களின் கல்வியில் விளையாட வேண்டாம்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் வேண்டுகோள்
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்த 179 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 167 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கும் விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: 2021-22 மற்றும் 2023-24ம் ஆண்டுக்கான ஆர்டிஇ நிதியை. வழக்கு தொடுத்த பிறகு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டில் மாணவர்களிடம் கட்டணம் பெற்றிருந்தால் அதை 17ம் தேதிக்குள் திருப்பி செலுத்த ெதரிவித்துள்ளோம். இதுபோன்ற கல்வி நிதியை ஒன்றிய அரசு தடுத்து மாணவர்களின் கல்வியுடன் விளையாட வேண்டாம். இவ்வாறு கூறினார்.