சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களால் முன்மொழியப்பட்ட தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன் என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்திருந்தது. அதன்படி நேற்று 37 மாவட்டங்களில் தீர்மான ஏற்பு கூட்டங்கள் நடந்தன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி கலந்து கொண்டார்.
திருவாரூர்- முதன்மை செயலாளர் கே.என்.நேரு, கரூர்- துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, கோவை வடக்கு- துணை பொதுச்செயலார் ஆ.ராசா, கன்னியாகுமரி கிழக்கு-திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நாமக்கல் கிழக்கு- துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், திருப்பூர் வடக்கு-அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தஞ்சை வடக்கு-முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை வடக்கு- கவிஞர் மனுஷ்யபுத்திரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.