Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்

சேலம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் (06111), கொல்லம்-சென்னை எழும்பூர் (06112), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06113), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06114), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06119), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06120), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06127),

கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06128), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06117), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06118), ஆகிய சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ``இந்த சிறப்பு ரயில்கள் பெரும்பாலும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக செல்கிறது. அதிகாலை முதல் இரவு வரையில் தொடர்ந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களில் பக்தர்கள், முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்’’ என்றனர்.