தமிழகம் முழுவதும் 38 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு, டிரான்ஸ்பர்: தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு
சென்னை : தமிழகம் முழுவதும் வருவாய் துறையைச் சேர்ந்த 38 துணை ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை நெடுஞ்சாலை அலுவலகம் தனி துணை ஆட்சியர் (நிலஎடுப்பு) பூஷ்ணா தேவி பெருநகர சென்னை மாநகராட்சி (தேர்தல்கள்) மாவட்ட வருவாய் அலுவலராகவும், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மாவட்ட வருவாய் அலுவலராகவும்(திட்டங்கள்), வேலூர் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் தனஞ்செயன் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் கூடுதல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் நிர்வாக அலுவலர் சுகந்தி தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் பொதுமேலாளராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேலாளர் ரமேஷ் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) பொதுமேலாளராகவும், தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம், துணை ஆட்சியர் இளங்கோவன் கோயம்பேடு வெளிவட்ட சாலை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும்,
வாலாஜாபாத் வட்டம் கலால் மேற்பார்வை அலுவலரான சந்திர சேகரன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருச்சி நகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் உதவி ஆணையர் அருள் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மேலாளர் கார்குழலி சென்னை கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணை இயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெயராமன் திருவள்ளூர் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் நடேசன் சென்னை பேரூராட்சிகள் இயக்ககம் இணை இயக்குநராகவும், சென்னை சிட்கோ மேலாளர் மனோன்மணி சென்னை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மாவட்ட வருவாய் அலுவலராகவும்,
சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அனைந்திந்திய குடிமை பணியாளர் பயிற்சி மைய நிர்வாக அலுவலர் காயத்திரி சுப்பிரமணி அதே துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலராகவும், துணை முதலமைச்சரின் முதுநிலை நேர்முக உதவியாளர் மணிராஜ் துணை முதலமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளராகவும் என தமிழ்நாடு முழுவதும் 38 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
